நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வாத்தி. தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார்.
இந்நிலையில், வாத்தி படத்தின் ட்ரெய்லர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இன்று (பிப்ரவரி 8 ) வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.
கல்வி வணிக மயம் குறித்து இந்தப் படம் பேசியுள்ளதாக தெரிகிறது. அதை கதையின் நாயகன் எப்படி அணுகுகிறார் என்பதுதான் கதைக்களம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லரை சமூக வலைதளங்களில் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நாடோடி மன்னன் , வா வாத்தி பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அதிமுகவில் சாதி யுத்தம்: ’புதிய’ பன்னீர் செல்வத்தின் சிங்கப் பாதை?
அதானி… அதானி… மோடி… மோடி…: ராகுலை கடுமையாக சாடிய பிரதமர் மோடி