இயக்குநர் செல்வராகவனின் டிவிட்டர் பதிவு, இன்று (டிசம்பர் 31) மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் நடிகராகவும் வலம் வருபவர் செல்வராகவன். இவர் சமூக வலைத்தளப்ப க்கத்தில் அடிக்கடி சில தத்துவங்களையும் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டிக் கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இயக்குநர் செல்வராகவனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், ‘செல்வராகவனின் இந்த பதிவுக்கு என்ன காரணமாக இருக்கும்’ என்று பேசத் தொடங்கினர்.
அதில் ஒரு சிலர், செல்வராகவன் தனது இரண்டாவது மனைவியான கீதாஞ்சலியை விவாகரத்து செய்யப் போகிறாரா என்று கருத்து பதிவிட்டும் வந்தனர்.
ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் மகள் புகைப்படத்தைப் பதிவிட்டு “மை லைஃப், மை கேர்ள்ஸ்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 31) மீண்டும் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கிக் கிடந்து , வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்துவிட்டு ’கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலனு தெரியல’ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள்- அனுபவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ‘என்னதான் சொல்ல வருகிறார் இவர்’ என்று குழப்பத்தில் உள்ளனர்.
மோனிஷா
துடிக்க துடிக்க மஸ்தான் கொலை – காருக்குள் நடந்தது என்ன?
”விடியலுக்காக காத்திருக்கிறோம்” திமுகவை நெருங்குகிறாரா ராமதாஸ்?