நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (அக்டோபர் 19) வெளியாகி உள்ள படம் லியோ.
கைதி, விக்ரம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி யுனிவர்ஸ் கான்செப்ட் உருவாக்கினார் லோகேஷ். லோகேஷ் கனகராஜின் இந்த யுனிவர்ஸ் படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம டிரெண்டானதால் ரசிகர்களே லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸுக்கு LCU (Lokesh Cinematic Universe) என்று பெயர் வைத்துக் கொண்டாட தொடங்கிவிட்டனர்.
கமலஹாசனின் விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவை ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் லோகேஷ். விக்ரம் படம் முடிந்த கையோடு அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கப் போவதாக லோகேஷ் அறிவித்தவுடன் நிச்சயம் இந்த படமும் LCU தான் என்று ரசிகர்கள் ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக சமூக வலைதளங்களில் லியோ படம் குறித்தும் இந்த படத்தின் கதை இதுதான் என்றும் ரசிகர்களே பல மீம்களை பதிவிட்டு வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் எந்த ரியாக்ஷனும் காட்டாமல், இத்தனை நாட்கள் லியோ LCU படமா இல்லையா என்பதை மிகவும் சஸ்பென்ஸ் ஆக மெயின்டைன் செய்தார் லோகேஷ்.
இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், லியோ படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் #LCU என்று குறிப்பிட்டு பதிவிட்டார். உடனே ரசிகர்களும் லியோ படம் LCU தான் என்று உறுதி செய்து விட்டனர்.
இருந்தாலும் அந்த சஸ்பென்சை வெளிப்படையாக கூறாமல் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் லோகேஷ் மீண்டும் சந்தேகம் எழுப்பினார்.
லியோ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூட, லியோ LCU படமா இல்லையா என்பது படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றுதான் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு வெளியான லியோ படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கிவிட்டது.
லோகேஷ் கனகராஜ் கூறியது போலவே லியோ படத்தின் முதல் 10 நிமிட காட்சிகள் செம மாஸாக இருப்பதாகவும், தளபதி விஜய்க்கான புதிய டைட்டில் வெற லெவல் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லியோ படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் பொறுமையாக தொடங்கி, சண்டை காட்சிகள், விஜய்யின் அல்டிமேடான நடிப்பு, செம மாஸான இடைவேளை காட்சி என லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் மிரட்டியுள்ளாராம்.
கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியான லியோ படத்தை பார்த்த ரசிகர்கள் லியோ LCU படம் தான் என்பதை உறுதி செய்துவிட்டனர்.
Great outing for @actorvijay 🔥#Leo
Glad to see #LCU take full form!
— S Abishek Raaja (@cinemapayyan) October 19, 2023
இதேபோல் பிரபல தமிழ் யூடியூப்பர் சினிமா பையன் அபிஷேக் ராஜா லியோ படம் LCU தான் என்பதை தனது எக்ஸ் பக்கத்தில் கன்ஃபார்ம் செய்துள்ளார்.
கூடிய விரைவில் கமல்,விஜய்,சூர்யா கார்த்தி, பகத் என அனைத்து முன்னணி நடிகர்களையும் ஒரே படத்தில் பார்க்க போகிறோம் என்பதை நினைத்து பார்த்தாலே வெறித்தனம் ஓவர்லோடிங் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
தமிழ்நாட்டுக்கு வெளியே… லியோ ரிலீஸை கொண்டாடும் ரசிகர்கள்!
பிக் பாஸ் சீசன் 7: அக்ஷயாவுக்கு கொடுக்கப்பட்ட சாபக் கல்!