இந்தியன் 2 படத்தில் கார்த்திக்?

சினிமா

இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், குரு சோமசுந்தரம், நெடுமுடி வேணு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மீண்டும் தொடங்கவுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு

இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பிப்ரவரி 2020-ல் ஏற்பட்ட எதிர்பாராத கிரேன் விபத்தால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக்

படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில் காஜல் அகர்வால் பிரசவத்திற்கு பிறகு இந்தியன் படத்தில் நடிப்பதன் மூலம் பணிக்கு திரும்பவதை இன்ஸ்டாகிராம் நேரலையில் உறுதிபடுத்தினார். மேலும் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்தாலும், வில்லனாக நடித்தாலும் தனது நடிப்பு திறன் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துவிடுவார்.
எனவே, இந்தியன் 2 படத்தில் கார்த்திக் நடிப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மோனிஷா

திருச்சிற்றம்பலம்: தனுஷ் கேரக்டர் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *