இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் நடிகை பிரியங்கா மோகன், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார், நடிகர் சந்திப் கிஷன், நடிகை நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று ( ஜனவரி 3) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். தனுஷ் மேடையில் பேசும் போது ரசிகர்கள் அனைவரும் விசில் அடித்து உற்சாகப் படுத்தினார்கள்.
இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர் ஒருவர், கேப்டன் மில்லர் ஈவெண்டை காண வந்த நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஐஸ்வர்யா என்பவரிடம் தவறாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது. உடனே, கோபப்பட்ட ஐஸ்வர்யா அந்த நபரை காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்து, அந்த நபரின் தலையில் இரண்டு மூன்று அடிகளையும் கொடுத்தார். இந்தச் சம்பவத்தால் நிகழ்ச்சியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
சமீபத்தில் நடிகர் கூல் சுரேஷ், ஒரு படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு மாலையை அணிவித்ததும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
விஜய் மீது காலணி வீச்சு: காவல் நிலையத்தில் புகார்!
கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணை!