துணிவு படம் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்த படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றார். நடிகை பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்கு பின்பு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க போகிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிக பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் அஜித் குமார் குறித்த குறியீடுகள் நிறையவே இருந்தது. மேலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்திருந்தார். பல இன்டர்வியூகளில் நான் அஜித் சார் ரசிகன் என்று வெளிப்படையாகவே ஆதிக் கூறியிருந்தார்.
தற்போது ரசிகன், கோ-ஆர்டிஸ்ட் என்ற லெவலை தாண்டி அஜித் படத்தின் இயக்குனர் என்ற லெவலுக்கு சென்றுவிட்டார் ஆதிக். அஜித் – ஆதிக் கூட்டணியில் உருவாக போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா