தமிழ் சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகர் கார்த்தி. சமீபத்தில் இவரது 25 வது படமான ஜப்பான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஜப்பான் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படத்தில் நடித்துள்ளார். இதற்கு பிறகு தற்போது ’96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி தனது 27வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி உடன் நடிகர் அரவிந்த் சாமி இணைந்து நடிக்கின்றார் என்றும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தி 27 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணத்தில் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது கார்த்தி 27 படத்தில் பிரபல சீரியல் நடிகை நடிக்க இருக்கின்றார் என்ற புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
’ஈரமான ரோஜாவே 2’ தொடரில் பிரியா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்வாதி, கார்த்தி 27 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறாரா..? அல்லது அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்கிறாரா..? என்று தெரியவில்லை. கூடிய விரைவில் இந்த படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கார்த்தி 27 படத்தை தொடர்ந்து சர்தார் 2, கைதி 2, தீரன் 2 ஆகிய படங்கள் கார்த்தியின் லைன் அப்பில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
பெண் பயணிகளிடம் விவரம் சேகரிக்கும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்: எடப்பாடி கண்டனம்!
உத்தரகாண்ட் சுரங்க விபத்து: மீட்பு பணிகள் தொய்வு!