மேற்குத் தொடர்ச்சி மலை வசனகர்த்தா காலமானார்!

Published On:

| By Selvam

Rasi Thangadurai Passed away

நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில் இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இந்தப் படம் விமர்சன ரீதியாக அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த படம் இசைஞானி இளையராஜாவின் 1001-வது படம்.

பல விருதுகளை வென்ற இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் எழுத்தாளர் ராசீ தங்கதுரை.

மேற்குத் தொடர்ச்சி மலை படத்தில் வசனம் எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த எழுத்தாளர் ராசீ தங்கதுரை இருதய பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவ. 13) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காலமானார்.

மேற்குத் தொடர்ச்சி மலை படம் மட்டுமின்றி கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘தேன்’ படத்திற்கும் ராசீ தங்கதுரை தான் வசனம் எழுதி இருக்கிறார்.

ராசீ தங்கதுரை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இயக்குனர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், “மண்மணம் மாறாத, வாஞ்சை மிகுந்த நண்பரும், மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தாவுமான எங்கள் அன்பிற்குரிய ராசீ.தங்கதுரை இன்று காலமானர்…ராசீ அய்யா…. முத்தங்கள் அய்யா….” என பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டான்லி மருத்துவமனை கேண்டீனில் எலி: டீன் அதிரடி உத்தரவு!

பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடிப்பு: ஒருவர் கைது!

தளபதி 68 ஷூட்டிங் ஓவர்… சென்னைக்கு திரும்பிய விஜய்

கையில் தீப்பந்தம்: சூர்யாவின் மாஸ் லுக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel