சொந்த கைத்துப்பாக்கியால் இன்று (அக்டோபர் 1) அதிகாலை எதிர்பாராதவிதமாக தனது காலில் சுட்டுக்கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய திரையுலகில் 90களில் மிக பிரபலமாக அறியப்பட்ட பாலிவுட் நடிகர்களுள் ஒருவர் கோவிந்தா. நடனம் மற்றும் நகைச்சுவை திறமைக்காக ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர் இதுவரை 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இணைந்து அரசியலிலும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கொல்கத்தா செல்வதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் கோவிந்தா தயாராகி வந்தார். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துவைக்கும்போது தற்செயலாக சுட்டதில் அவர் காலில் குண்டு பாய்ந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் சரிந்து கடும் வலியால் கதறிய அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டு, அருகில் உள்ள அந்தேரியில் உள்ள க்ரிதி கேர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தோட்டாவை மருத்துவர்கள் அகற்றியுள்ள நிலையில், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அறிந்த மும்பை அந்தேரி போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, கோவிந்தாவின் துப்பாக்கியை கைப்பற்றியதுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரஜினியின் தொடையைத் திறந்து… அப்பல்லோவில் அளிக்கப்படும் சிகிச்சை – மருத்துவ ரிப்போர்ட்!
ஆறு நாள்களுக்கு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட சென்னை கடற்கரை: என்ன காரணம்?