ரசிகர்களின் லேட்டஸ்ட் கிரஷும், தென்னிந்திய சென்சேஷனலுமான நடிகை மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
இந்தியில் வெளியான கும் கும் பாக்யா தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மிருணாள் தாகூர் (31).
தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தின் வழியாக தென்னிந்திய சினிமாவில் காலடி பதித்த இவர் தொடர்ந்து ஹாய் நன்னா படத்தின் மூலம் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறியுள்ளார்.
தற்போது டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான, விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக பேமிலி ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்தி, மராத்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் மிருணாள் தாகூர் இன்னும் தமிழில் நடிக்கவில்லை.
என்றாலும் விரைவில் சூர்யா ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என தெரிகிறது. இந்த நிலையில் மிருணாளின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.
அதன்படி அவரின் சொத்து மதிப்பு ரூபாய் 33 கோடியாக உள்ளது. சுமாராக மாதம் ஒன்றுக்கு திரைப்படங்கள், விளம்பரங்கள் வாயிலாக மட்டுமே ரூபாய் 6௦ லட்சம் சம்பாதிக்கிறார். தற்போது படமொன்றுக்கு ரூபாய் 2 கோடியினை அவர் சம்பளமாக வாங்குவதாக தெரிகிறது.
மேலும், ரூபாய் 2.17 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ், ரூ.30 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சுனர் , ரூ.45 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்ட் ஆகிய கார்களையும் மிருணாள் சொந்தமாக வைத்துள்ளார்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தீவிரமாகும் ‘கச்சத்தீவு’ விவகாரம்: தமிழக அரசியல் தலைவர்கள் ரியாக்சன் என்ன?
பீகார்: பாஜக-நிதிஷூக்கு எதிராகப் போராடும் 34 வயது இளைஞர்
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்!