தலைவர் 170 படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த விவரங்களை லைக்கா நிறுவனம் தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து வருகிறது.
ஏற்கனவே தலைவர் 170 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் படத்தில் நடிக்கப் போகின்றனர் என்ற அப்டேட்களை லைக்கா நிறுவனம் அறிவித்துவிட்டது.
தலைவர் 170 படத்தில் இத்தனை ஹீரோயின்கள் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் கதை பெண்களை மையப்படுத்தி உருவாக உள்ளது,
மேலும் படத்திற்கு அது மிகப்பெரிய பிளஸ் பாய்ண்ட் ஆக இருக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தங்கள் கருத்துகளையும், தலைவர் 170 கதை இதுதான் என்று டி – கோடிங் செய்து பகிர தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் தலைவர் 170 படத்தில் பாகுபாலி பட புகழ் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே மலையாள நடிகர் பகத் பாசில் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Casting of #Thalaivar170 😱🤯🥵🔥
Fahad Faasil & Rana Daggubati 👌🏻🔥 pic.twitter.com/Bzu4EQEoJB
— KARTHIK DP (@dp_karthik) October 3, 2023
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் பகத் பாசில் தலைவர் 170 படத்தில் இணைந்த செய்தி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது.
தலைவர் 170 படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராணாவும், பகத் பாசிலும் மோத போகிறார்களா? அல்லது ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் போல தலைவர் 170 படத்தில் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஒவ்வொரு நாளும் பிரபல முன்னணி நடிகர்கள் தலைவர் 170 படத்தில் இணைந்து கொண்டிருப்பதால் அடுத்து எந்த நடிகர் இந்த படத்தில் இணைய போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
“வெயிட்டிங்கே வெறி ஆகுது..!”
கார்த்திக் ராஜா
ராமர் பாலம் வழக்கு: உச்சநீதிமன்றம் உத்தரவு!
நிர்மலா சீதாராமனை சந்தித்தது ஏன்?: பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி!