எழில் 25: தேசிங்கு ராஜா 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Published On:

| By Kavi

கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான தேசிங்கு ராஜா படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தை எழில் இயக்கி இருந்தார்.

தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் எழில், தேசிங்கு ராஜா 2 படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் என தகவல் வெளியானது. இந்த படத்திலும் விமல் தான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம் இயக்குனர் எழில் இயக்கும் 25 வது படம் ஆகும்.

இந்த படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இசையமைக்கிறார். நடிகர்கள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, புகழ், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 27) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் பி.வாசு, நடிகர் ஜெயம் ரவி மற்றும் படக்குழுவினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தற்போது தேசிங்கு ராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தேசிங்கு ராஜா 1 படத்தை போலவே இரண்டாம் பாகமும் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் : புறப்படும் முன் சொன்னது என்ன?

காந்தியை அவமதிக்கவில்லை : ஆளுநர் ரவி விளக்கம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel