‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ – ஹாட் சீனில் தமன்னா…கோடிக்கணக்கில் சம்பளம்!

சினிமா

ஓடிடி தளங்களுக்கு தணிக்கை இல்லாததால் நடிகைகள் பலரும் தங்களது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று வெப் சீரிஸில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வருகின்றனர். அந்த பட்டியலில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை தமன்னா.

தென்னிந்திய நடிகைகளில் பிரபலமானவர்களில் தமன்னாவும் ஒருவர். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.

பின்னர், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், தனுஷ், சூர்யா ஆகியோருடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து ”பச்சைத் தீ நீயடா! இச்சைப் பூ நானடா! ஒற்றைப் பார்வை கொண்டே..பற்றிக் கொண்டாயடா! என்ற பாடலில் வரும் காட்சியில் கவர்ச்சியாக நடித்திருப்பார்.

இந்த காட்சிகள் அப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்குள்ளானது.

Tamannaah salary Lust Stories 2

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக உள்ள ‘லஸ்ட் ஸ்டோரீஸ் – 2’ தொடரின் டீசர் கடந்த ஜூன் 6 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Tamannaah salary Lust Stories 2

அதில் தமன்னாவின் நெருக்கமான படுக்கை அறை காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

பாலியல் உறவு குறித்த இந்திய பெண்களின் புரிதலை 4 கோணங்களில் இருந்து சொல்வதுதான் ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் கதை.

இதன் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதையடுத்து, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற பெயரில் பாலிவுட் நட்சத்திரங்களான நீனா குப்தா, கஜோல், விஜய் வர்மா, மிருணாள் தாக்கூர் , தமன்னா ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Tamannaah salary Lust Stories 2

இந்த படத்தில் விஜய் வர்மா உடன் படுக்கை அறை காட்சியில் நடிப்பதற்காக நடிகை தமன்னா 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே வெப் தொடரில் நடிக்க கஜோல் ரூ. 3 கோடியும் மிருணாள் தாக்கூர் ரூ. 3 கோடியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நடிகர் விஜய் வர்மாவும் தமன்னாவும் காதலித்து வருவதாகவும், இந்த படத்தின் படபிடிப்பின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும்…அதனால் தான் இவ்வளவு தைரியமாக படுக்கை அறை காட்சியில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் என்று கிசுகிசு க்கிறது பாலிவுட் வட்டாரம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

’அவரு தூங்கல… கண்ண தான் மூடி இருந்தாரு’: லபுஷேனை கலாய்க்கும் ரசிகர்கள்!

சுப்ரியா சுலேவுக்கு புதிய பதவி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *