மாரிமுத்துவை தொடர்ந்து டைமிங்கும் மாற்றம்: எகிறும் எதிர்நீச்சல் சீரியல்!

சினிமா

தமிழக மக்களால் விரும்பி பார்க்கப்படும் எதிர்நீச்சல் சீரியலின் ஒளிபரப்பு நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில்  சன் டிவியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல்.

இயல்பான காட்சி அமைப்பு, உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கதாப்பாத்திரங்கள், ஆணாதிக்கம் நிரம்பி வழியும் குடும்பம், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக வாழும் பெண்கள் எனப் பல காரணங்களால் தமிழக மக்களால் இந்த சீரியல் விரும்பி பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடித்த மறைந்த நடிகர் மாரிமுத்துவால் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.

அவருடன், கனிகா, ஹரிப்பிரியா மதுமிதா, கமலேஷ், விஜே விமல், சத்யப்பிரியா, காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்து வருகின்றனர்.

இதனால் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலை பார்த்த பின்னரே பலரும் உறங்க செல்வதாக சமூகவலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், கடந்த 2 வாரங்களாகவே அந்த கேரக்டர் இல்லாமல் தான் கதையும், காட்சிகளும் நகர்ந்தது.

இந்த நிலையில் பல்வேறு யூகங்களுக்கு மத்தியில் ஆதி குணசேகரன் கேரக்டரில் எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி நடிக்கிறார். அதற்கான ப்ரோமோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து, தற்போது எதிர்நீச்சல் சீரியலின்  ஒளிபரப்பும் நேரத்தையும் மாற்றியுள்ளது சன் டிவி. இதுவரை வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சீரியல், இன்று முதல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு ஜாமீன்: நிபந்தனை என்ன?

கொரோனாவின் எதிரிகள்: யார் இந்த காட்டலின், வெய்ஸ்மேன்?

+1
4
+1
3
+1
2
+1
10
+1
4
+1
1
+1
7