இந்திய நாட்டின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி நாடாளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் அவர் வெற்றிபெற்றதை எதிர்த்து அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜ்நாராயணன் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இந்திராகாந்தி வெற்றிபெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்திராகாந்தி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. இதனை சமாளிக்க 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 இந்தியாவில் அவசரநிலை சட்டத்தை பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார்.

இதனை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள படம் ‘எமர்ஜென்சி‘. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் பாஜக ஆதரவாளரான நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். அத்துடன், படத்தை அவரே இயக்கியும் உள்ளார். படத்திற்கு திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை கங்கனா ரணாவத் நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகள் நடந்துவந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் விதமாக ஒரு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா ரணாவத், “பாதுகாவலரா அல்லது சர்வாதிகாரியா? நம் தேசத்தின் தலைவர் தன் மக்கள் மீதே போர் தொடுத்த நமது வரலாற்றின் இருண்ட காலகட்டத்தை காணுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்திய நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதியில்” எமர்ஜென்சி” திரைப்படத்தை கங்கணா ரணாவத் வெளியிட திட்டமிட்டிருப்பது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமானுஜம்
ஆஷா பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!