அசோக் செல்வன் நடிக்கும் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ : ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு !

Published On:

| By Sharma S

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்து தற்போது ரிலீஸுக்குத் தயாராகவுள்ள திரைப்படம் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’. இந்தத் திரைப்படம் வருகிற நவ.15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தடுத்த நாட்களில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை நிலவரங்கள் தெரிவித்துள்ளதன் காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அப்படக்குழு தெரிவித்துள்ளது.

ராம்காம் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தில் அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், பகவதி பெருமாள், படவா கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ஜெரோம் ஆலன் படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களை மோகன் ராஜன் எழுதியுள்ளார். டி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

தளபதி 69 : இணைகிறாரா சிவராஜ்குமார்?

விஜய்சேதுபதி மகனின் ‘பீனிக்ஸ்’ : ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel