எதிர்நீச்சல் சீரியல் குழந்தை நட்சத்திரமான தாரா, மாரிமுத்துவின் உடலைப் பார்த்துக் கதறி அழுதது காண்போரைக் கண்கலங்கச் செய்தது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களை அதிகமாகக் கவரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து ஆதி குணசேகரன் என்ற பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்தத் தொடரில் ஹரிப்ரியாவை பார்த்து, மாரிமுத்து சொல்லும் ‘ஏய் இந்தாம்மா’ என்ற வசனம் மிகவும் பிரபலமானது.
அவரது நடிப்பு, முகபாவனைக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்று மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாரித்துமுவின் உடலுக்கு சீரியல் பிரபலங்கள், வெள்ளித் திரை பிரபலங்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் தாராவும் வந்து மாரிமுத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
சீரியலில் நந்தினி மற்றும் கதிரின் மகளாக நடிக்கும் தாரா “பெரியப்பா எழுந்திருங்க பெரியப்பா” என்று கதறி அழுதது காண்போரை கண் கலங்கச் செய்தது.
எதிர்நீச்சல் சீரியலில் தாராவுக்கு பெரியப்பா கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா