லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை!

Published On:

| By Monisha

ED raid in lyca production

சென்னையில் உள்ள லைகா படத்தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மே 16) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சுபாஸ்கரன் அல்லிராஜாவால் நிறுவப்பட்ட லைகா நிறுவனம், தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளது.

சமீபத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் தமிழ் திரையுலகின் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்த பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகம் திரைப்படம் உலகளவில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் சுமார் ரூ.500 கோடி வரை வசூல் செய்தது.

சமீபத்தில் வெளியான அதன் இரண்டாம் பாகம், உலக அளவில் இதுவரை ரூ.300 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் லைகா படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான 8 இடங்களில் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், காரப்பாக்கம் உள்ளிட்ட லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

மோனிஷா

பார்வையாளர்களை உலுக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர்

குழப்பத்தில் கர்நாடகா முதல்வர் பதவி: டெல்லி செல்கிறார் டி.கே.சிவகுமார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel