நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான கிங் ஆப் கோத்தா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து துல்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் லக்கி பாஸ்கர்.
தனுஷின் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி தான் லக்கி பாஸ்கர் படத்தை இயக்கியுள்ளார். சீதா ராமம் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது தெலுங்கு படம் ‘லக்கி பாஸ்கர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் துல்கருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஃபார்ச்சூன் 24 மற்றும் சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் லக்கி பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று (ஏப்ரல் 11) படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் துல்கர் சல்மான் பேங்கில் வேலை செய்பவராக நடித்திருக்கிறார். ‘ஒரு சாதாரண பேங்க் எம்ப்ளாயி அக்கவுண்டில் இவ்வளவு பணமா?’ என, டீசரில் இடம் பெற்றுள்ள வசனம் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது.
‘மிடில் கிளாஸ் மெண்டாலிட்டி சார், நாங்க செலவை குறைச்சிக்கிட்டு பணத்தை சேர்த்து வைப்போம். போட்டின்னு வந்துட்டா ஒரு ரூபாய கூட மிச்சம் வைக்காம செலவு பண்ணிடுவோம்’, என்று துல்கர் சல்மான் பேசும் வசனம் நன்றாக உள்ளது.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் துல்கருக்கு இந்த ‘லக்கி பாஸ்கர்’ படம் ஒரு நல்ல வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Thug Life: அடுத்தடுத்து வெளியேறும் நட்சத்திரங்கள்… அந்த நடிகர் மட்டும் உறுதியாம்..!
இத்தனை சவரன் ‘நகையோட’ தான் கல்யாணம் பண்ணேன்… ஓபனாக சொன்ன அனிதா சம்பத்!
உதயநிதியின் நம்பிக்கை நட்சத்திரம்… யார் இந்த ஈரோடு பிரகாஷ்?