நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் டீசர் இன்று(ஜூன் 28) வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், இந்தியில் சுப் ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, இந்தியில் உருவாகியுள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், துல்கர் சல்மான் நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படமான ’கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் இன்று (ஜூன் 28) வெளியாகியுள்ளது.
இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா லக்ஷ்மி,பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழியில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது . தற்போது இந்த படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்