ஜிகர்தண்டா 2 படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்!

Published On:

| By Kavi

Dulquer Salmaan releasing Jigarthanda 2 Movie in Kerala

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சித்தார்த் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகி சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் கதையின் கரு மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்  தெரிவித்திருந்தார்.

வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மேலும் தமிழ் சாட்டிலைட் உரிமை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கேரள திரையரங்கு வெளியீட்டு உரிமையை நடிகர் துல்கர் சல்மான் வாங்கியுள்ளார். நடிகர் துல்கர் சல்மானின் “வேவரர் பிலிம்ஸ் நிறுவனம்” மூலம் தீபாவளி பண்டிகை  முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் கேரளாவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெரும் சிக்கலில் இந்தியா: ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவாரா?

தேவர் நினைவிடத்தில் இரு மணிமண்டபம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel