ராஜ்கமல் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’. 36 வருட இடைவேளைக்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் காம்போ மீண்டும் இணைந்துள்ளது.
படத்தின் பெயரே சற்று வித்தியாசமாக இருக்கும் நிலையில், நடிகர் கமலும் இப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் திரிஷா, அபிராமி, நாசர் போன்ற பலர் இணைந்து நடித்து வருகின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் நிறைவு பெற்றதையடுத்து, படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் செர்பியாவில் நடைபெறவிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனையால் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி, சித்தார்த் ஆகியோரும் படத்தில் இருந்து விலகினர். இந்நிலையில் தற்போது படம் குறித்த முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கால்ஷீட் பிரச்சனை சரி செய்யப்பட்டு நடிகர் துல்கர் சல்மான் மீண்டும் படத்தில் இணைந்துள்ளார். ஆனால் ஜெயம் ரவி, சித்தார்த் ஆகியோர் மீண்டும் இணையவில்லை. இருவரின் கால்ஷீட்டையும் வீணடித்தது தான் இதற்குக் காரணம் ஆகும்.
சுதா கோங்குரா – சூர்யாவின் புறநானூறு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், துல்கர் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. மறுபுறம் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் 90 வயது சேனாபதியாக மிரட்டி உள்ளாராம். இதில் அவருடன் நடிகர் சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா போன்ற பலர் நடித்துள்ளனர் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகிறது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?
நடிகை லட்சுமி மேனனா இது? – ஆளே அடையாளம் தெரியல… வைரல் ஆகும் Video..!
உச்சநீதிமன்றத்தில் கைகூப்பி மன்னிப்பு கோரினார் பாபா ராம்தேவ்