SK vs DQ : “லக்கி பாஸ்கர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

சினிமா

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெளியான கிங் ஆப் கோத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.

அந்த படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “லக்கி பாஸ்கர்”.

இந்த படத்திற்கு முன் இயக்குநர் வெங்கி அட்லூரி நடிகர் தனுஷின் வாத்தி படத்தை இயக்கியவர்.

சீதா ராமம் படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது நேரடி தெலுங்கு படம் “லக்கி பாஸ்கர்”. இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார்.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் லக்கி பாஸ்கர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துல்கர் சர்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான் பேங்க் எம்ப்ளாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் SK vs DQ மோதல் நிச்சயமாக அனைவராலும் கவனிக்கப்படும்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் துல்கர் சல்மானுக்கு இந்த “லக்கி பாஸ்கர்” படமும் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சூர்யா 44 வில்லன் இவரா..? கார்த்திக் சுப்புராஜின் சர்ப்ரைஸ்..!

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்!

சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவை: தவிர்ப்பது எப்படி?

T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *