கே.ஜி. எஃப் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் “சலார்”. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சலார் படம் 2 மணி நேர 55 நிமிட நீளம் கொண்ட படமாக தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சலார் படத்திற்கான இறுதி டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன் என்று நடிகர் பிரித்திவிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், சலார் படத்திற்கான இறுதி டப்பிங் திருத்தங்கள் முடிந்தது. பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய பல்வேறு மொழிகளில் எனது அனைத்து கதாபாத்திரங்களுக்கும் எனது சொந்தக் குரலில் டப்பிங் பேச கூடிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
https://twitter.com/PrithviOfficial/status/1733830666469704156?t=cq2oityVS2OHdEBlLxm4jQ&s=19
என்னுடைய சில கதாபாத்திரங்களுக்கு பல மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால் ஒரே கேரக்டருக்கு ஒரே படத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் டப்பிங் பேசுவது எனக்கு இதுதான் முதல் முறை. டிசம்பர் 22, 2023 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தேவாவும் வரதாவும் உங்களைச் சந்திப்பார்கள்! என்று பதிவிட்டிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா