நடிகை ரீமா கல்லிங்கல் நடத்தும் பார்ட்டி… எத்தனை இளம் பெண்கள்… பாடகி சுசித்ரா வீசும் குண்டு!

சினிமா

நடிகை ரீமா கல்லிங்கல் வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடப்பதாகவும், அங்கு இளம்பெண்கள் சீரழிக்கப்படுவதாகவும் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

மலையாள படவுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்த அறிக்கையால் அதிர்ச்சி ஏற்பட்டது.  அதோடு, மலையாள திரையுலகில் பரவலாகவே  போதை பொருள்கள் பயன்படுத்தப்படுவதாகவும், ஹேமா கமிட்டி  அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை.

இந்த நிலையில், பாடசி சுசித்ரா எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு அளித்த பேட்டியில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், நடிகை ரீமா கல்லிங்கல் கொச்சியிலுள்ள அவரின் வீட்டில் அடிக்கடி பார்ட்டி நடத்துகிறார். அதில், ஏராளமான இளம் பெண்கள் கலந்து கொள்வார்கள். நடிகர்களும் கலந்து கொள்வார்கள். போதை வஸ்துகளும் அந்த பார்ட்டியில் பயன்படுத்தப்படும். அங்கு, வைத்து ஏராளமான இளம் பெண்கள் சீரழிக்கப்படுகின்றனர்.

போதை சாக்லேட்டுகள் விருந்தில் பரிமாறுவார்கள். இது அவரின் சினிமா வாழ்க்கையையும் பாதித்தது. ரீமா வீட்டில் நடந்த பார்ட்டிகளில் எத்தனை ஆண்களும், பெண்களும் போதைப்பொருட்களை பயன்படுத்தினார்கள் தெரியுமா? யாருமே ரீமாவிடம் இந்த கேள்விகளை கேட்பதில்லை. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி நீங்கள் பேசலாமா? சில நடிகர்கள் போதை பொருட்களை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் படபிடிப்புக்கே வர முடியாது என்றும் என்னிடத்தில் கூறியுள்ளனர்.

ரீமா இத்தகைய விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பார்ட்டிகளில் கலந்து கொண்ட பல மலையாள பாடகர்கள்,  வேதனைக்குரிய பல விஷயங்களை என்னிடத்தில் கூறியுள்ளனர் என்று பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

Paralympics 2024: மல்யுத்தத்தில் இருந்து ஈட்டி எறிதல்… சாதித்த சுமித் அன்டில்

தங்கம் விலையில் மாற்றமில்லை!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0