சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு புகைப்படங்கள்: கொந்தளித்த டிஆர்கே கிரண்

Published On:

| By Selvam

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் புகைப்படங்கள் ஏன் இடம்பெறவில்லை என்று தமிழ் திரைப்பட நடிகர் டிஆர்கே கிரண் கேள்வி எழுப்பிய நிலையில் விமான நிலையத்தில் தமிழ்நாட்டின் புகைப்படங்கள் இடம்பெறும் என்று சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

திரைப்பட நடிகரும், கலை இயக்குநருமான டிஆர்கே கிரண் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாட்டில் உள்ள சிறந்த இடங்களின் புகைப்படங்கள் ஏன் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சென்னை விமான நிலையத்தில் மற்ற நாட்டில் உள்ள சிறந்த இடங்களின் படங்களை வைத்துள்ளார்கள். ஏன்? தமிழ் நாட்டில் சிறந்த இடங்கள் இல்லையா? இல்லை அவர்களுக்கு தெரியவில்லையா? இது தமிழ் நாட்டின் விமான நிலையம் தானே.? வேறு ஊரில் இப்படி இல்லையே, இங்கு மட்டும் ஏன் இப்படி?

விமான நிலையத்திற்கு தான் பல மாநிலங்களில் இருந்தும், பல நாட்டில் இருந்தும் மக்கள் வருகிறார்கள், அவர்களுக்கு நம் கலாச்சாரமும் நமது கலை மற்றும் பண்பாட்டையும் நாம் தானே காட்டவேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

அவரது ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள சென்னை விமான நிலையம், “உங்களுடைய கருத்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் வரும் நாட்களில் மாற்றியமைக்கப்படும். தமிழ்நாட்டின் புகைப்படங்கள் விமான நிலையத்தில் இடம்பெற முக்கியத்துவம் அளிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

கட்டம் கட்டப்பட்ட அமைச்சர் நாசர்  மகன்: ஸ்டாலின் வீசிய முதல் சாட்டை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel