“மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் திரைப்படம் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’.
யுஜிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி என மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக்கும் முதல் மலையாளப் படம் இதுவாகும்.
இப்படத்தில் பாசில் ஜோசப், கிஷோர், ஹரிஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, ஜெகதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் இப்படத்தில் டோவினோ தாமஸ் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
படத்தின் டைட்டில் கேரக்டர்களான ‘மணியன்’, ‘அஜயன்’, ‘குஞ்சிகேலு’ ஆகிய மூன்று பாத்திரங்களில் மாறுபட்ட தோற்றங்களில் டோவினோவே நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் திரைக்கதை கேரளாவின் ‘களரி’ எனும் தற்காப்புக் கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது.
பன்மொழிகளில் தயாரிக்கப்படும் பான் இந்தியா படமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படம் 3-டி தொழில் நுட்பத்தில் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை சுஜித் நம்பியார் எழுதியுள்ளார். அறிமுக இயக்குநரான ஜிதின் லால் இயக்குகிறார்.
இராமானுஜம்
“குட்டிக் காவலர்” விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
பாம்பன் பாலத்தில் பேருந்து விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!