தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகை நயன்தாரா.
சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்ததின் மூலம் ஹிந்தி சினிமா ரசிகர்களின் கவனத்தையும் நயன்தாரா ஈர்த்துள்ளார். கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி நயன்தாரா நடிப்பில் அன்னபூரணி என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் அன்னபூரணி பட புரோமோஷனுக்காக நயன்தாரா ஒரு இன்டர்வியூ கொடுத்திருந்தார். அந்த இன்டர்வியூவில் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என நயன்தாரா தெரிவித்தார்.
அந்த இன்டர்வியூவில் நயன்தாரா பேசியதாவது, ”லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள், அதை சொன்னாலே என்னைத் திட்டுகின்றனர். இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா அல்லது பெண் என்பதினால் அப்படி ஒரு பட்டம் இருக்கக் கூடாது என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என பத்து பேர் பெருமையாக அழைக்கிறார்கள். ஆனால் ஐம்பது பேர் திட்டுகிறார்கள். என்னுடைய பயணம் அந்த பட்டத்தை நோக்கியது கிடையாது. நான் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட வேண்டாம் என்று சொன்னாலும் யாருமே கேட்பதில்லை. ரசிகர்கள் கொடுத்திருக்கும் அன்புக்காகத் தான் அதை எடுத்துக் கொண்டேன்” என்றார்.
நயன்தாராவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
வேலைவாய்ப்பு : ஐடிபிஐ வங்கியில் பணி!