தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘தற்போது சினிமா பார்க்கும் பார்வையாளர்கள் ரொம்ப நெகட்டிவ் ஆகிட்டாங்க’ எனப் பேசியுள்ளார்.
இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பான் இந்திய திரைப்படம் ‘தேவரா’.
இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. விமர்சகர்கள் மத்தியிலும் மிகக் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஜூனியர் என்டிஆர், ‘ ஆடியன்ஸ் தற்போது நிறைய நெகட்டிவாக மாறி உள்ளார்கள்.
முன்பு போல் யாரும் ஒரு படத்தை அப்படியே ரசிப்பதில்லை. ஒரு படத்தை ஜட்ஜ் செய்வது, ஆராய்வது என நிறைய குழம்பிக்கொள்கிறார்கள். நிறைய சினிமாவுக்கு நாம் பழக்கப்படுவது தான் அதற்கு காரணமா எனத் தெரியவில்லை.
என்னுடைய மகன்கள் ஒரு படத்தை மிக எளிமையாக ரசித்துக் கொண்டாடுகிறார்கள். அதில் நடித்த நடிகர், இயக்கிய இயக்குநர் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை. நம்மால் ஏன் அவ்வாறு எளிமையாக ஒரு படத்தை அணுக முடிவதில்லை என எனக்குத் தெரியவில்லை.
இது எல்லாம் பார்வையாளர்களின் பரிணாமத்தின் ஒரு சுழற்சி என்றே நினைக்கிறேன். விரைவில் அது இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புகிறேன்’ எனப் பேசியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான ‘தேவரா’ திரைப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலி கான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சுனில், கலையரசன் எனப் பலர் நடித்துள்ளனர். கோலிவுட்டைச் சேர்ந்த அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தேவரா படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் – ’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இணைந்து ஒரு பிரம்மாண்ட படத்தில் பணியாற்ற உள்ளனர் என செய்திகள் வெளியானது. ஆனால், ‘தேவரா’ படத்தின் தோல்வி அந்தப் படத்தின் பட்ஜட்டை பாதித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விமான நிகழ்ச்சியில் உயிரிழப்பு… அறிக்கை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு!
பிக் பாஸ் வீட்டில் கழுதை… போட்டியாளர்களுடன் தங்க ஏற்பாடு!
’மகாராஜா ‘ நிதிலனுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு!
கிறுக்கு பிடித்த ட்ரோலர்ஸ் … தலையை பிய்த்துக் கொள்ளும் பிரியா மணி