அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா வெளியீடு என அறிவிக்கப்பட்டு, வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வந்த சூழலில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் அக்டோபர் 10 வெளியீடு என அறிவிப்பு வெளியானது.
வணிகம், வசூல் கருதி கங்குவா படத்தின் வெளியீட்டை அப்படத்தின் கதாநாயகன் சூர்யா மூத்தோருக்கு வழிவிட்டு வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக அறிவித்தார்.
அதே போன்ற சூழல் விடாமுயற்சி – குட் பேட் அக்லி படங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இரண்டு படத்திலும் கதாநாயகன் அஜித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
திட்டமிடல், நிதிப் பிரச்சினை, கால்ஷீட் குழப்பங்களால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இதனால் அஜித் குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு தேதிகள் கொடுத்தார். அந்தப்படம் அறிவிக்கப்பட்ட போதே 2025 பொங்கல் வெளியீடு என மைத்ரி மூவிஸ் புரொடக்ஷன் அறிவித்தது. லைகா நிறுவனத்தின் சார்பில் விடா முயற்சி டிசம்பர் மாதம் அல்லது பொங்கல் வெளியீடு என விநியோகஸ்தர்களிடம் தகவல் கூறப்பட்டுள்ளது.
வேட்டையன் படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடும் வேலைகளில் லைகா தீவிரம் காட்டி வரும் சூழலில், தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தை வெளியிடலாம் என படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி தரப்பில் லைகா நிறுவனத்திடம் ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.
ஆனால், தயாரிப்பு நிறுவனமோ டிசம்பர் அல்லது பொங்கல் வெளியீடு என்பதில் உறுதியாக உள்ளது. அதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அடிப்படையில் 2025 பொங்கலுக்கு குட் பேட் அக்லி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அரைச்ச மாவையே அரைக்க வேண்டாம்” – அதிமுக – பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!