முத்தக் காட்சியில் ஏன் நடித்தேன் தெரியுமா? விளக்கம் கொடுத்த குட்டி நயன்
’’ஓ மை டார்லிங்’’ எனும் மலையாள படத்தில் முத்தக் காட்சியில் நடித்தது ஏன் என்பது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். இதனையடுத்து மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மகளாக நடித்து அசத்தினார்.
இந்நிலையில், அனிகாவுக்கு தற்போது 18 வயது ஆகிவிட்டதால், அவர் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அந்த வகையில் இவர் முதன்முதலில் நடிகையாக நடித்த திரைப்படம் ’’புட்ட பொம்மா’’.
இது மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கப்பேலா எனும் காதல் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படம் கடந்த பிப்ரவரி 4-ந் தேதி ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கு அடுத்தபடியாக அனிகா நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ’’ஓ மை டார்லிங்’’. ரொமாண்டிக் திரைப்படமான இதை ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி மிகவும் வைரல் ஆனது.
இதற்கு காரணம் இப்படத்தில் அனிகா ஏராளமான முத்தக் காட்சியில் நடித்துள்ளதுதான். அந்த காட்சிகள் ட்ரைலரிலும் இடம்பெற்று இருந்தன. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.
இந்நிலையில், முத்தக் காட்சியில் நடித்தது குறித்து நடிகை அனிகா சுரேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி அவர் கூறியதாவது : “ஓ மை டார்லிங் முழுநீள காதல் படம். அதில் முத்தக்காட்சி இடம்பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று.
கதை சொல்லும்போதே இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தையும் இயக்குனர் சொல்லி இருந்தார். கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதில் நடித்தேன்.
அந்த காட்சிகளில் துளி அளவு கூட ஆபாசம் இருக்காது. படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு அது புரியும்” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“4 ரவுண்டு சுட்டதில் 3 ரவுண்டு குண்டு பாய்ந்தது” – கோவை ஆணையர் பேட்டி
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: டவர் டம்ப் அனாலிசிஸ் மூலம் தேடுதல்!