சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (பிப்ரவரி 12 ) திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர் என்னுடைய அரசியல் எதிரி என்பது சாதி தான் என்று கூறினார்.
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தை கமல்ஹாசன் இன்று(பிப்ரவரி 12 ) திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், உயிரே..உறவே..தமிழே இதுதான் வாழ்வின் உண்மை தத்துவம். அரசியல் மற்றும் கலாச்சாரத்தையும் தனியாக வைத்திருக்க கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்றும், நாம் உருவாக்கியது தான் அரசியல்.. ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கிறோம். நாம் நியமித்தவர்கள் அவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கும் வரும் போது ஜனநாயகம் நீடுடி வாழும்.
ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாறும். தன்னுடைய கொடூரமான அரசியல் எதிரி என்பது சாதி. அதை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பது அம்பேத்கர் தொடங்கி இன்று வரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடந்த பாடில்லை. அந்த தொடர் போராட்டத்தின் நீட்சிதான் நீலம் பண்பாட்டு மையம் . அரசியல்வாதி ஆன பிறகு சில சமரசங்கள் செய்ய வேண்டியுள்ளது. ரஞ்சித் தொடங்கிவைத்த இந்த போராட்டம் அவருக்கு தாடி வெள்ளையான பிறகு அவரே ரசிக்கும் படி இருக்கும் என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
”நாட்டு நாட்டு” பாடலுக்கு நடனமாடிய ஆனந்த் மஹிந்திரா: கற்றுக்கொடுத்த ராம் சரண்
மணப்பாறையில் விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு