2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. இது இந்திய நேரப்படி நாளை ( மார்ச் 13 ) ஆம் தேதி காலை 5.30 மணிக்கு Disney+Hotstar -ல் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை தற்போது காணலாம்:
ஆஸ்கர் விருதுகளில் முக்கியமான விருதாக சிறந்த நடிகைக்கான விருது கருதப்படுகிறது. ஆஸ்கார் வரலாற்றில் பல நடிகைகள் ஒருமுறைக்கு மேல் அகாடமியின் மிக உயர்ந்த விருதை பெற்றுள்ளனர்.
அதன்படி, 1933, 1967, 1968 ,மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் முறையே ‘மார்னிங் குளோரி’, ‘கெஸ் ஹூ’ஸ் கம்மிங் டு டின்னர்’, ‘தி லயன் இன் வின்டர்’ மற்றும் ‘ஆன் கோல்டன் பாண்ட்’ ஆகிய படங்களில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுகளை நடிகை கேத்தரின் ஹெப்பர்ன் வென்றிருந்தார். இவர்தான் அதிக முறை சிறந்த நடிகைக்கான விருதை பெற்றவராவார்.

ஃபிரான்சஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிக்கைக்கான விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.
1996 ஆம் ஆண்டு வெளியான ‘பார்கோ’ திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதையும், 2017 ஆம் ஆண்டு வெளியான ‘த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி’ மற்றும் 2020 ஆம் ஆண்டு வெளியான ‘நாமட்லேண்ட்’ படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதையும் வென்றுள்ளார்.

1986 ஆம் ஆண்டு வெளியான ‘சில்ட்ரன் ஆஃப் எ லெஸ்ஸர் காட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக மிக இளம் வயதில் ஆஸ்கர் விருதை வென்றவாரக மார்லி மாட்லின் இருக்கிறார். இவர் அந்த விருதை வென்ற போது இவருடைய வயது 21 மட்டுமே.

அதிக வயதில் ஆஸ்கர் விருதை பெற்ற நடிகையாக ஜெசிகா டேண்டி உள்ளார். தன்னுடைய 80 வது வயதில் 1990 இல் வெளியான ‘டிரைவிங் மிஸ் டெய்ஸி’ திரைப்படத்திற்காக அந்த விருதை அவர் வென்றுள்ளார்.

2001ஆம் ஆண்டில் வெளியான ‘மான்ஸ்டர்ஸ் பால்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஹாலே பெர்ரி வென்றுள்ளார். இவர் இவ்விருதை வென்ற ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகை ஆவார்.

ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படத்தில் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்ற நடிகையாக சோபியா லோரன் உள்ளார்.

1961 வெளியான ‘டூ வுமன்’ என்ற படத்திற்காக அவர் இவ்விருதை வென்றுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாளை தொடங்கும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு: முழு விவரம் இதோ!