ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹேல் கதூரியா: யார் தெரியுமா?

சினிமா

நடிகை ஹன்சிகா மோத்வானி மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சோஹேல் கதூரியாவை டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன குஷ்பு என்று அழைக்கப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் விஜய், சூர்யா, ஜெயம் ரவி , தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர்.

சமீபத்தில் ஹன்சிகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடக்க இருப்பதாக சில செய்திகள் வெளியான நிலையில் அதற்கு ஆதாரமாக அவருடைய வருங்கால கணவர் யார் என்று நடிகை ஹன்சிகா உலகிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகிற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள 450 வருடங்கள் பழமை வாய்ந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்ய உள்ளார்.

Do you know who Hansika future husband Sohail Khaturia

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது.

ஹன்சிகா மோத்வானியின் 11வது வயதில் இருந்தே இரண்டு குடும்பங்களும் நண்பர்களாக பழகி வருகின்றனர்.

இப்போது ஹன்சிகா மற்றும் சோஹேலின் குடும்பம் நண்பர்களாக இருந்து உறவுகள் என்ற வோறொரு புதிய பயணத்தைத் தொடங்க இருக்கிறார்கள்.

திருமணத்திற்குப் பிறகு நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

ஒவ்வொரு தொழிலும் மதிப்பு மிக்கது என்பதை உறுதியாக நம்பும் ஹன்சிகா, நிச்சயம் திருமணம் எந்தவொரு தொழிலுக்கும் தடையாக இருக்காது என்கிறார்.

Do you know who Hansika future husband Sohail Khaturia

தற்போது ஹன்சிகா ‘பார்ட்னர்’, ‘ரெளடி பேபி’, ‘மை நேம் ஈஸ் ஷ்ருதி’, ‘105’, ‘கார்டியன்’ மற்றும் ‘ MY3’ ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

இதில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படங்களின் வெளியீட்டுத் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இன்னும் தலைப்பிடப்படாத இயக்குநர்களான இகோர் மற்றும் கண்ணன் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புக்கு மட்டும் சில நாட்களை ஒதுக்கியுள்ளார் ஹன்சிகா.

இவர், சில குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மம்தா

மம்தா-ஸ்டாலின் பேசியது என்ன?

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *