“கல்கி 2898 ஏடி” 5 நாட்களில் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சினிமா

கல்கி 2898 ஏடி” திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.555 கோடி வசூல் செய்த நிலையில், 5ஆம் நாள் வசூல் எவ்வளவு என்பதை நாம் பார்க்கலாம்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கல்கி 2898’. இதில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள “கல்கி 2898” படம் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் காட்சிகள் நிரம்பிய கல்கி திரைப்படம் தெலுங்கு, இந்தி சினிமா ரசிகர்களிடையே கடந்த 5 நாட்களாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் கல்கி படத்தின் வசூல் சிறப்பாக இருப்பதாகவும், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் படத்தின் வசூல் மிக பலவீனமாகவே உள்ளதாக தெரிகிறது.

கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட KGF, தெலுங்கில் தயாரான பாகுபலி-2 ஆகிய இரு படங்களும் பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானபோது ஒரே மாதிரியான பாக்ஸ் ஆபீஸ் வசூல் செய்தது.

மொழிகளை கடந்து சினிமா ரசிகர்களால் KGF, பாகுபலி – 2 படங்கள் கொண்டாடப்பட்டது. வசூலை போன்றே பார்வையாளர்களின் எண்ணிக்கையும் இந்த இரு படங்களுக்கும் அதிகம் இருந்தது. இன்று வரை பாகுபலி-2 படம் பார்த்தவர்களின் எண்ணிக்கை முறியடிக்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது

ஆனால், “கல்கி 2898 ஏடி” படம் அப்படி இல்லை என்கிறது திரையரங்க வட்டாரங்கள். கல்கி படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானது.

இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி ரூ.191 கோடி, ஜூன் 28 ஆம் தேதி ரூ.104 கோடி, ஜூன் 29 அன்று 120 கோடி, ஜூன் 30ல் ரூ.140 கோடி என 4 நாட்களில் மொத்தமாக ரூ.555 கோடி வசூல் செய்திருக்கிறது என வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இப்படம் சுமார் ரூ.84 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதில், இந்தியில் ரூ.16.5 கோடியும், தெலுங்கில் ரூ.14.5 கோடியும், தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் முறையே ரூ.2 கோடி, ரூ.0.3 கோடி மற்றும் ரூ.1.3 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், உலக அளவில் ரூ.45 கோடிக்கு மேலும் வசூலாகி உள்ளது.

இதனால், தற்போது வரை “கல்கி 2898 ஏடி” படத்தின் மொத்த வசூல் ரூ.635 கோடியாக உள்ளது. படம் வெளியான 5 நாட்களிலேயே மகத்தான வசூலை அள்ளிய இந்த திரைப்படம் விரைவில் ரூ.1,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலகக்கோப்பையுடன் நாளை நாடு திரும்புகிறது இந்திய அணி!

ராகுல் காந்தி உரையில் இருந்து 11 பகுதிகள் நீக்கம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0