இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான Sci-Fi திரைப்படம் அயலான். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.
ஏலியன் கான்செப்ட்டை மையமாக கொண்டு ஒரு சூப்பர் ஹீரோ படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், படம் வெளியான முதல் நாளில் இருந்தே அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் தான்.
நேர்த்தியான VFX காட்சிகள் மூலம் படம் முழுக்க ரசிகர்கள் நம்பும் வகையில் ‘Tattoo’ என்ற ஏலியன் கேரக்டரை சிறப்பாக உருவாகியதற்காக அயலான் படக்குழுவினரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், மது அருந்தும், புகை பிடிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாமல் அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு ஜனரஞ்சகமான படத்தை கொடுத்ததற்காக இயக்குநர் ரவிக்குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
https://twitter.com/kjr_studios/status/1747139171029004591
இந்நிலையில் இந்த படம் உலகளவில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான படமாக இருந்தாலும் அயலான் படத்திற்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவால் சிவகார்த்திகேயனும் படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
’இந்த வீரரால் இந்திய தேர்வுக்குழுவுக்கு பெரும் தலைவலி’: கவாஸ்கர்
நயன் – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ஜல்லிக்கட்டு ஆவணப்படம்!