தீபாவளி படங்கள் : சாதித்த சர்தார் சறுக்கிய பிரின்ஸ்!

சினிமா

2022 தீபாவளி பண்டிகை தினத்தன்று எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை. தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்ட பிரின்ஸ், சர்தார் ஆகிய இரண்டு படங்களும் அக்டோபர் 21 அன்றே தமிழ் தெலுங்கு மொழிகளில் வெளியானது.

ஏற்கனவே செப்டம்பர் 30 அன்று வெளியான ” பொன்னியின் செல்வன்” 200 திரைகளுக்கு மேல் தொடர்ந்தது. அக்டோபர் 15 அன்று கன்னடத்தில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட” காந்தாரா” 100 திரைகளில் தொடர்ந்தது.

சில நகரங்களில், மால்களில் 50 க்கும் மேற்பட்ட திரைகளில்”நானே வருவேன்” திரைப்படமும் ஓடியது. இவற்றுடன் ஹாலிவுட் திரைப்படமான BLAKADAM-ம் தீபாவளி போட்டியில் களமிறங்கியது.

diwali movies sardar and prince collection status

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பில் 2021 அக்டோபர் 9 அன்று டாக்டர், 2022 மே 13 அன்று டான் என இரண்டு படங்கள்வெளியாகி அடுத்தடுத்து 100 கோடி வசூல் செய்த பட்டியலில் இடம் பெற்றது.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் புராடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் தயாரிக்கப்பட்டது.

டாக்டர், டான் படங்களில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். ஆனால் பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் – சத்யராஜ் இருவரை தவிர வேறு நடிகர்கள் யாரும் இல்லை என்பதுடன் சிவகார்த்திகேயன், அவரது காமெடியை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்ட படம் பிரின்ஸ் .

இந்நிலையில், குடும்பங்கள் கொண்டாடும் எண்டர்டெயினராக கருதப்பட்ட சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தீபாவளியையொட்டி 100 கோடி வசூலை குவிக்கும் ஹாட்ரிக் வெற்றியை நிகழ்த்தும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கியுள்ளது.

diwali movies sardar and prince collection status

பிரின்ஸ் படத்தின் தெலுங்கு, தமிழ் பதிப்புகள் வசூல் அடிப்படையில் பின்னடைவை சந்தித்துள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 370 திரைகளில் வெளியான பிரின்ஸ் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 20 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது.

இந்த வருடம் கார்த்தி நடித்த விருமன் படம் ஆகஸ்ட் 12 அன்றும்  செப்டம்பர் 30 அன்று பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களும் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்றன.

பொன்னியின் செல்வன் வெளியாகி 21 நாட்கள் இடைவெளியில் அக்டோபர் 21 அன்று சர்தார் தமிழ்நாட்டில் 350 திரைகளில் வெளியானது. வெளியான முதல் நாள் பிரின்ஸ் படத்தை காட்டிலும் குறைவான வசூலை பெற்ற சர்தார் அடுத்தடுத்த நாட்களில் அதிகமான வசூல் செய்யும் படமாக மாறியது.

முதல் மூன்று நாட்களில் 20 கோடி மொத்த வசூல் செய்த சர்தார் தீபாவளி அன்று(அக்டோபர் 25), 14 கோடி, அக்டோபர் 25ஆம் தேதி 13 கோடி மொத்த வசூல் செய்து தமிழ் சினிமா பாக்ஸ்ஆபீஸ் வசூலில் தீபாவளி வெளியீட்டில் முதல் இடத்தை பெற்றதுடன் கார்த்தி தனது திரையுலக வாழ்க்கையில் முதன்முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெற காரணமானது.

ஐந்து நாட்களில் 47 கோடி ரூபாயை மொத்த வசூலாக பெற்றுள்ளது சர்தார் படம்.

மேற்கண்ட இரண்டு படங்களுடன் வெளியாகி 21 நாட்களை கடந்த பின்னரும் வசூல் கணக்கில் சம போட்டியாளராகவே இருந்தது பொன்னியின் செல்வன்.

திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பங்கள் பார்க்க விரும்பிய படங்களில் முதல் இடத்தில் பொன்னியின் செல்வன், இரண்டாம் இடத்தில் பிரின்ஸ் மூன்றாம் இடத்தில் சர்தார் என்றே இருந்தது.

பிரின்ஸ் படத்திற்கு எதிரான விமர்சனங்கள், சொதப்பலான திரைக்கதை காரணமாக குடும்பங்களை வசீகரிக்க கூடிய படமாக மாற முடியவில்லை. விருமன் , பொன்னியின் செல்வன் இரண்டு படங்களும் கார்த்தியை குழந்தை முதல் பெரியவர்கள் வரை ரசிக்ககூடிய நடிகராக மாற்றி இருந்தது.

diwali movies sardar and prince collection status

அதன் தாக்கம், எதிரொலி சுமாரான படம் என விமர்சகர்களால் கூறப்பட்ட சர்தார் முதலிடத்திற்கு வரவும், ஹாட்ரிக் வெற்றியை நிகழ்த்தவும் காரணமானது.

குறைவானதிரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 10 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த வசூல் செய்து புதிய படங்களுக்கு போட்டியாளராகவே தன்னை தக்க வைத்துக் கொண்டது.

காந்தாரா ஓடிக்கொண்டிருந்த திரைகள் அனைத்திலும் கடந்த ஐந்து நாட்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியுள்ளது சென்னை போன்ற நகர்புறங்களில் நேரடி தமிழ் படங்களுக்கு அதிக காட்சிகள் ஒதுக்கீடு செய்யவேண்டி இருந்ததால்” காந்தாரா” படம் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டிருக்கிறது

தீபாவளி வெளியீடு, வசூல் சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் பேசியபோது,

“ஒரே படம் என்கிற நிலைமாறி இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கும் 80% திரைகளில் புதிய படங்கள் வெளியானது ஆரோக்கியமானது. பொன்னியின் செல்வன், காந்தாரா படங்கள் வசூல் நிலவரங்களின் அடிப்படையில் திரையரங்க உரிமையாளர்களே விரும்பி புதிய படங்களை தவிர்த்தனர்.

அந்தப் படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிகமான சதவீதத்தில் பங்கு கிடைக்கும் என்பதால் பொன்னியின் செல்வனும், காந்தாராவும் திரையரங்குகளில் தொடர்ந்தது.

டாக்டர், டான் படங்களின் மூலம் விஸ்வரூப வெற்றியை பெற்ற சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படம் மூலம் மோசமான தோல்வியை எதிர்கொண்டுள்ளார். சர்தார் சுமாரான படம் தான். ஆனால் அந்தப் படத்திற்கு போட்டியாக வந்த படம் அதை காட்டிலும் மோசமான படமாக இருந்ததால் சர்தார் சாதனை படமானது பிரின்ஸ் பின்னடைவை சந்தித்தது” என்றனர்.

– அம்பலவாணன்

ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்ஷ்மி படங்கள் : கெஜ்ரிவால் கோரிக்கை

கோவை கார் வெடிப்பு: தலைமைச் செயலாளருடன் டிஜிபி ஆலோசனை!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published.