ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ்மன்றம் இணைந்து தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ரத்த சாட்சி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’, ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘கைதிகள்’ என்னும் சிறுகதையை தழுவி தயாரிக்கப்படும் படம் ‘ரத்த சாட்சி’.
ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பது தான் ‘கைதிகள்’ சிறுகதையாகும்.
இந்தக் கதையை திரைப்படமாக உருவாக்குவதில் பிரபலமான பல தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டினர்.
ஜெயமோகனின் கூற்றுப்படி, இந்த ‘ரத்த சாட்சி’ படம் உருவான கதையையே இன்னொரு சினிமாவாக எடுக்கலாம்..!
“ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குநர் என்னை அணுகி ‘கைதிகள்’ கதையைப் படமாக்க விரும்பினார். இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குநர் மணிரத்னமும் இக்கதையை கேட்டார்.
தொடர்ந்து கதையின் உரிமையைப் பெற இயக்குநர் வெற்றிமாறனும் என்னை அணுகினார். கதையை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுத்துவிட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்” என்கிறார் ஜெயமோகன்.
அதன்படி இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர்.
திருமதி அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘ஆஹா தமிழ் OTT’ தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
இராமானுஜம்
ரூ. 10 கோடி: சமாதானமான வாத்தி தனுஷ்
மன்மோகன் சிங்கை புகழ்ந்து தள்ளிய கட்கரி: ஏன்?