‘நட்புனா என்னான்னு தெரியுமா’,‘லிஃப்ட்’, ‘டாடா’ ஆகிய படங்களுக்குப் பிறகு கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஸ்டார்’. இது கவினின் 5-வது படமாகும். இளன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இதில் கவினின் ஜோடியாக அதிதி எஸ்.போஹன்ஹர் நடித்து வருகிறார். இப்படத்தில் பல்வேறு வேடங்களில் கவின் இருப்பது போல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் அவரின் ஏழாவது படத்தினை இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க இருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தினை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் விக்ரனன் அசோகன் இயக்கவுள்ளாராம்.
இதை உறுதி செய்வது போல வெற்றிமாறன், கவின் இருவரும் பேசிக்கொண்டு நிற்பது போல புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவினின் 4-வது படத்திற்கு ‘கிஸ்’என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தினை சதீஷ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். 6-வது படத்தினை நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்க, நெல்சன் தயாரிக்கிறார்.
குறுகிய காலத்திலேயே கவின் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதால், அவரின் 7-வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளது .
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOAT, தளபதி 69 படங்களுக்கு விஜயின் ‘சம்பளம்’ இதுதான்?
காஷ்மீரில் தனித்து போட்டி : இந்தியா கூட்டணிக்கு மேலும் ஒரு பின்னடைவு!