மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி பாடிய ரஞ்சிதமே பாடலை வாரிசு திரைப்பட இயக்குனர் வம்சி பாராட்டியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு முன்னணி இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான முன்னா, பிருந்தாவனம், யவடு, மகரிஷி உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன.
அந்த வரிசையில் தற்போது இயக்குனர் வம்சி விஜயுடன் வாரிசு படத்துடன் கைகோர்த்துள்ளார்.
வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியானது.
இந்தநிலையில், கடந்த நவம்பர் 3-ஆம் தேதி வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் புரோமா வெளியானது. இன்று இந்த ரஞ்சிதமே முழு பாடல் வெளியாக உள்ளது.
தமன் இசையமைப்பில் விஜய் இந்த பாடலை பாடியிருந்தார். பாடல் புரோமோ வெளியானதிலிருந்து இணையம் முழுக்க ரஞ்சிதமே பாடல் ட்ரெண்டானது.
பலரும் ரஞ்சிதமே பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அந்தவரிசையில் மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி தண்ணீர் பிடிக்கும் குடத்தை மத்தளமாக பயன்படுத்தி ரஞ்சிதமே பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் அனைவராலும் அதிகளவில் பகிரப்பட்டது.
திருமூர்த்தியின் பாடலைக் கேட்ட வாரிசு திரைப்படத்தின் இயக்குனர் வம்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது பாடலை மேற்கோள் காட்டி ஹார்ட் எமோஜி பதிவிட்டுள்ளார்.
இதனால் திருமூர்த்தியை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
செல்வம்