தங்கர்பச்சானுடன் பாரதிராஜா: அழகிக்குப் பின் ஓர் அழுத்தம்!

சினிமா

இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், மம்தா மோகன்தாஸ், யோகிபாபு, கௌதம் மேனன், ஆர்.வி.உதயகுமார், மஹானா சஞ்சீவி, பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தங்கர்பச்சானின் முந்தைய திரைப்படங்களை போலவே, இந்தப் படமும் தங்கர்பச்சான் எழுதிய ஒரு சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் தயாரிப்பு, இயக்கம் இவற்றில் இன்றைய சூழலுக்கு ஏற்ப சமரசம் செய்து கொள்ளாத தங்கர்பச்சன் எப்போதும் போன்று தனது பாணியிலான வெகு இயல்பான வாழ்வியல் கொண்ட திரைப்படமாக கருமேகங்கள் கலைகின்றன இருக்கும் என்கிறார். 

director thangar bachan next movie

மேலும் படம் பற்றி தங்கர் பச்சான் கூறுகையில் ”நாஞ்சில் நாடனின் ‘கல்வெட்டு’ கதையை ‘அழகி’யாக்கினேன். தொடர்ந்து ‘அம்மாவின் கைப்பேசி’ ‘ஒன்பது ரூபாய் நோட்டு’க்களும் சிறுகதைகளில் இருந்துதான் பிறந்தன.

இப்போது “கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன” என்ற என் சிறுகதை, “கருமேகங்கள் கலைகின்றன” என்ற சினிமாவாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் வீர சக்தி, தமிழ் பற்று உள்ள ஒரு சிறந்த தயாரிப்பாளர். எந்த நெருக்கடியும் தராமல் இந்தப் படத்தை எடுத்து வருகிறார்.

ஆதலால், என் உயிரையும், உணர்வையும் எரிபொருளாய் போட்டு படத்தை உருவாக்கி வருகிறேன். இந்தக் கதைக்கு பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்னு அசலான நடிகர்களாக, இவர்களை விடவும் பாத்திர வடிவுக்கு யாரும் கிடையாது என்பதைஉறுதிபடுத்தும். பாரதிராஜா அளவுக்கு யாரும் இதில் செய்ய ஆளில்லை.

ஒவ்வொரு நாளும் “தங்கர், உன் படத்தில் நடிக்கிறது எனக்குப் பெருமை”ன்னு சொல்லுவார். தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டியவர்.

ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு வேலை பார்க்கும் யோகி பாபு, இந்த கதையை சொன்னதும் ‘வந்துடுறேன் ஐயா’னு சொன்னார்.

அதன்படியே வந்து நடித்துக் கொடுத்தார். அவரை வெறும் நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது.

கௌதம் மேனன், இதுவரை செய்யாத பாத்திரத் தேர்வை அத்தனை கச்சிதமாக நடித்தார். எஸ்.ஏ.சியின் அனுபவம் இதில் பேசுகிறது.

மம்தா மோகன்தாஸ்தான் முக்கியமான கண்மணிங்கிற பொண்ணா வருது. நந்திதா தாஸ்க்கு பக்கத்தில் வர்ற கேரக்டர்.

இங்கேயிருந்து இணையத்தில் முகம் பார்த்து கதை சொன்னேன். அங்கேயிருந்து மம்தா அந்தக் கேரக்டரிலேயே வாழ ஆரம்பித்து விட்டது. ‘எப்போ ஷுட்டிங்..?’ன்னு கேட்டுட்டே இருக்கு.

director thangar bachan next movie

வெகு நாட்களுக்குப் பிறகு லெனின் இப்படத்துக்கு படத்தொகுப்பு செய்கிறார். ஜீ.வி.பிரகாஷ் உடன் இதுவரையிலும் நான் வேலை பார்த்ததில்லை.

இந்தப் படம் தான் எங்களுக்கு முதல் படம். தேசிய விருது வாங்கினாலும் சாதாரணமாக வந்து நிறைவாக பாடல்கள் போட்டுக் கொடுத்தார்.

பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள் மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும்.

உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் இத்திரைப்படம் பேசுகிறது. ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம்.

திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா. இதை நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். ‘அழகி’க்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது.” என்றார்.

ராமானுஜம்

”எழுதக் கற்றுக் கொடுத்தவரே கலைஞர்தான்” -கே.பாக்யராஜ்

அமித் ஷாவின் இந்தி வெறி பேச்சு: செப்டம்பர் 24இல் மதிமுக ஆர்ப்பாட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *