நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் லியோ. இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து உள்ளது.
ஏற்கனவே லியோ படத்தின் போஸ்டர்களுக்கும் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடியோ லாஞ்ச் நடத்துவதில் சில சிக்கல்கள் இருந்ததால், கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது.
விஜய்யின் குட்டி ஸ்டோரியை கேட்க முடியவில்லை என்ற சோகத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி (நாளை) லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக் குழு அறிவித்தது.
இந்நிலையில் லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணிபுரிந்திருக்கும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி, லியோ படத்தின் ட்ரெய்லர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த பதிவில், “இப்போதான் லோகேஷையும், லியோ ட்ரெய்லரையும் பார்த்தேன்.. ட்ரெய்லர் பார்த்தவுடன் உங்க தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்” என்று தீரஜ் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த பதிவிற்கு இயக்குனர் ரத்னகுமார் “கண்ட்ரோல்.. கண்ட்ரோல்..” என்று ரிப்ளை செய்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜனின் மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து லியோ படத்திலும் இயக்குனர் ரத்னகுமார் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Control control 😁 https://t.co/qCkCZKFEWy pic.twitter.com/AYwfSkMLra
— Rathna kumar (@MrRathna) October 3, 2023
லியோ படத்தின் டிரெய்லருக்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை மேலும் Hype ஏற்றுவது போல் தற்போது இந்த ட்வீட்கள் அமைந்துள்ளது.
லியோ டிரெய்லருக்காக வெயிட் செய்யும் ரசிகர்கள் ஒரு லைக் போட்டு உங்கள் ஆர்வத்தைக் காட்டுங்கள்…
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கார்த்திக் ராஜா