Director Siddique died by heart attack

ஃப்ரெண்ட்ஸ் பட இயக்குநர் சித்திக் காலமானார்!

சினிமா

பிரபல இயக்குநர் சித்திக் உடல்நலக்குறைவால் இன்று (ஆகஸ்ட் 8) இரவு காலமானார்.

பிரபல மலையாள இயக்குநர் சித்திக். 1989ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் நகைச்சுவை படங்களுக்குப் பெயர் போனவர்.

தொடர்ந்து ‘காட்ஃபாதர்’, ‘வியட்நாம் காலனி’, ’ஹிட்லர்’ உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கிய இவர் தமிழில் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான ஃபிரண்ட்ஸ் படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.

Director Siddique died by heart attack

தொடர்ந்து, தமிழில் பிரசன்னா நடித்த ‘சாது மிரண்டா’, விஜய் நடித்த ‘காவலன்’, அரவிந்த்சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

Director Siddique died by heart attack

மலையாள திரையுலகில் பிரபல இயக்குநராக வலம் வந்த சித்திக் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான பிக் பிரதர் படத்தை இயக்கியிருந்தார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சித்திக். இந்த நிலையில் நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று இரவு சிகிச்சை பலனின்றி இயக்குநர் சித்திக் உயிரிழந்தார்.

படங்களில் தனது நகைச்சுவை மூலம் பலரையும் சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக் மறைவு திரையுலகினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

மோனிஷா

மருத்துவ பரிசோதனைக்கிடையே தொடரும் அமலாக்கத்துறை விசாரணை!

என்.எல்.சி போராட்டம்: மாவட்ட எஸ்பி க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *