இயக்குனர் சண்முகப்பிரியன் காலமானார்!

சினிமா

இயக்குனரும் எழுத்தாளருமான, சண்முகப்பிரியன், உடல்நல குறைவு காரணமாக இன்று (பிப்ரவரி 2 ) காலமானார்.

தன்னுடைய சிறு வயதிலே, சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதுவதன் மூலம் ஒரு எழுத்தாளராக தன்னுடைய பயணத்தை துவங்கி, பின்னர் இயக்குனராக மாறியவர் சண்முகப்பிரியன்.

குறிப்பாக சண்முகப்பிரியன் எழுதிய “விளிம்பு” எனும் நாடகமே அவர் இயக்கத்தில் “உறவாடும் நெஞ்சம்”என்ற திரைப்படமாக 1976 ல் உருப்பெற்றது.

இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த சிவகுமார் சிறந்த நடிகருக்கான மாநில விருது பெற்றார்.

அதே போல் இயக்குனர் சண்முகப்பிரியன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கிய “ஒருவர் வாழும் ஆலயம்” எனும் திரைப்படம், 1980ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

திரைப்படங்கள் இயக்குவதை தாண்டி, வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா போன்ற 50 க்கும் மேற்பட்டத் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் சண்முகப்பிரியன்.’ஒருவர் வாழும் ஆலயம்’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

71 வயதாகும் இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார். இவரின் மறைவை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலர் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

இரட்டை இலை: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன பதில் என்ன?

தளபதி 67 டைட்டில் நாளை அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *