”இதயம் நிறைந்தது” அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்ட அதிதி
தன்னுடைய சகோதரி ஐஸ்வர்யா ஷங்கரின் நிச்சயதார்த்த புகைப்படங்களை, நடிகை அதிதி ஷங்கர் பதிவிட்டுள்ளார்.
தமிழின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. மருத்துவரான இவருக்கும் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை ஐஸ்வர்யாவின் சகோதரியும், நடிகையுமான அதிதி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘இதயம் நிறைந்தது’ என்னும் தலைப்பின் கீழ், ”தலைப்பில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் மகிழ்ச்சியை உணர்ந்து மகிழ்ச்சியால் எழுதப்பட்டுள்ளது,” என நெகிழ்ச்சியுடன் ஐஸ்வர்யா-தருண் இருவருக்கும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
விரைவில் இருவரின் திருமண தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’, தெலுங்கின் முன்னணி ஹீரோ ராம்சரனின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேளாண் பட்ஜெட் : முதல்வர் பெயரில் புதிய திட்டம்… ரூ.206 கோடி ஒதுக்கீடு!
வேளாண் பட்ஜெட் : கலைஞர் உருவப்படத்திற்கு அமைச்சர் மரியாதை!