பிக்பாஸ் வீட்டில் மீ டு புகாரில் சிக்கிய இயக்குநர்: கொந்தளிக்கும் நடிகை!

சினிமா

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பிரபல இயக்குநரான சஜித்கானை அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியில் அனுப்பும்படி டெல்லி மாநில மகளிர் ஆணையமும், சில நடிகைகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தி திரையுலகில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் சஜித்கான். இவர் திரைப்பட இயக்குநரான பாராகானின்  உடன் பிறந்த தம்பி.

கடந்த சில ஆண்டுகளாகவே இவர் மீது இந்தி திரையுலகில் இருக்கும் நடனப் பெண்மணிகளும், நடிகைகளும்  மீ டூ புகார் அளித்து வந்தனர்.

இதுவரையிலும் சஜித்கான் மீது பத்துக்கும் மேற்பட்ட மீ டூ புகார்கள் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16-வது சீஸனில் சஜித்கான் போட்டியாளராக இடம்பெற்று உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், மத்திய அமைச்சர் அனுராக் தாகூருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “இயக்குநர் சஜித்கான் மீது மீ டூ இயக்கத்தின்போது, பல்வேறு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர். அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சஜித்கானை ‘பிக்பாஸ்’ தொடரில் இருந்து வெளியேற்றுமாறு பிரபல இந்தி நடிகையும், மாடலுமான ஷெர்லின் சோப்ராவும் வலியுறுத்தியுள்ளார்

மீ டூ இயக்கத்தில்சஜித் கான் மீது புகார் அளித்த 10 பெண்களில் ஷெர்லினும் ஒருவர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் முன்னால், சஜித் கான் தனது அந்தரங்க உறுப்பை காட்டி, இதற்கு 0 – 10 வரை மார்க் போடச் சொல்லி சொன்னார்.

தற்போது, அந்த ‘பிக்பாஸ்’ வீட்டில் புகுந்து மார்க் போடலாம் என்று இருக்கிறேன்.

பாலியல் தொல்லை கொடுத்தவரிடம், பாதிக்கப்பட்டவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை பார்ப்போம்…” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘இந்த விவகாரத்தில் நீங்கள் யார் பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்’ என நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற முறையில் நடிகர் சல்மான் கானையும் டேக் செய்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இராமானுஜம்

தமிழில் வெளியாகும் வேறு மொழி படங்களின் லிஸ்ட்!

உதயநிதி போராட்டம் : அண்ணாமலை பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0