இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையும் அந்த படத்திற்கு உண்டு. இந்த படத்தில் ஒரு பாடல் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது.
தற்போது பார்த்திபன் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை பணியில் பார்த்திபன் மற்றும் டி. இமான் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில், இந்த புதிய படத்தின் அப்டேட் குறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அந்த பதிவில், “குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் முதல் பார்வையை (First look) குழந்தைப் பருவத்திலிருந்தே இசையின் விசையை அசைத்துப் பார்க்கும் லிடியன் நாதஸ்வரம் நாளை (20.01.2024) வெளியிடுவார்” என்று குறிப்பிட்டு லிடியனின் புகைப்படம் உள்ள ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
மீண்டும் பார்த்திபனின் ஒரு வித்தியாசமான முயற்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 19, 2024
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி!
விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சேமியா முட்டை அடை