திகம்பர சாமியர் படத்தில் நம்பியார், நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன், தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன், கோப்ரா படத்தில் விக்ரம் என எல்லோரும் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளனர்.
அந்த வரிசையில் நடிகர் கார்த்தி இணைந்துள்ளார். விருமன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியை தொடர்ந்து துப்பறியும் உளவாளி கதாபாத்திரத்தில் பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் சர்தார்.
தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 அன்று வெளியாகிறது.
இந்த படம் பற்றி நடிகர் கார்த்தி, ”என் திரையுலக வாழ்க்கையில் ‘சர்தார்’ படம் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘சர்தார்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 14) மாலை சென்னை வடபழநியில் உள்ள போரம்மால் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ”இந்தப் படத்திற்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு நம்பிக்கை கொடுத்தது படத்தின் தயாரிப்பாளர் தான். இரவு, பகல் பாராமல் வேலைபார்த்திருக்கிறோம்.
படத்தில் கார்த்தியை டார்ச்சர் செய்திருக்கிறேன். காரணம், பல கெட்டப்கள் படத்தில் உண்டு. கார்த்தியின் மெனக்கெடல் என்னையும் உந்தி தள்ளியது.
ரஜிஷா விஜயன், ராஷிகண்ணா, லைலா, சிறப்பாக நடித்துள்ளனர். என்னுடைய முதல் பண்டிகை ரிலீஸ் படம் இது” என்றார்
நடிகர் கார்த்தி பேசுகையில், ”மித்ரன் இயக்கத்தில் வெளியான ‘இரும்புத் திரை’ பார்த்த பிறகு எனக்கு வங்கியிலிருந்து வரும் எஸ்எம்எஸ் எனக்கு பயத்தை கொடுத்தது.
அந்த அளவுக்கு அவரின் படம் தாக்கத்தை ஏற்படுத்தியது. அண்மையில் அவர் என்னிடம் ஒரு ஒன்லைன் கூறினார். அது எனக்கு பிடித்திருந்தது.
ஸ்கிரிப்ட் எழுத சொன்னேன். எழுதி முடித்திவிட்டு புதிய வேடங்கள் கதைக்கு தேவையாக இருக்கிறது.
அந்த வகையில் இந்தப் படம் என் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன்.
முதல் முறையாக வயதான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக மெனக்கெடல் தேவைப்பட்டது.
பிகினி, சிக்ஸ்பேக் இல்லாத இந்தியன் ஸ்பை – த்ரில்லர் தான் ‘சர்தார்’. படம் சுவாரஸ்யமாகவும், இன்டலிஜயன்ஸாகவும் இருக்க நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது.
இந்தக் கதையை புரிய வைக்கவே நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்தது. 3 வருஷமாக உழைப்பை ஆவணப் படமாக்காமல், திரைப்படமாக்க உழைத்த மித்ரனின் உழைப்பு முக்கியமானதாக கருதுகிறேன்.
தீபாவளிக்கு வரும் படங்கள் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கும். அப்படி இந்தப் படம் வெளியாவதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்” என்றார்.
இராமானுஜம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
கிச்சன் கீர்த்தனா : பசலைக்கீரை கபாப்