இயக்குநர் மணிரத்னத்துக்கு என்னாச்சு?

சினிமா

இயக்குநர் மணிரத்னத்துக்கு இன்று (ஜூலை 19) நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் முன்னணி இயக்குநராக விளங்கும் மணிரத்னம், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அதற்காக தேசிய விருதுகளையும் அள்ளியவர். தற்போது அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, மிகப் பிரம்மாண்டமான முறையில் திரைப்படமாக எடுக்க முடிவெடுத்து, அதில் முதல் பாகத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.

இதில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்த இயக்குநர் மணிரத்னத்துக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று (ஜூலை 19) காலை தகவல் வெளியாகியிருந்தது. இதற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


சமீபகாலமாக கொரோனா தொற்று பரவலால், முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கொரோனா தொற்றுக்குப் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *