விளையாட்டு வினையாகும் என்ற கிராமத்து பழமொழிக்கு எடுத்துக்காட்டாகவும் விபத்துகளுக்கு நல்லவர் கெட்டவர் தெரியாது என்பதையும் சொல்லி அதிர வைத்திருக்கும் படம் சஞ்சீவன்.
படத்தில் நடித்திருக்கும் எல்லோரும் புதுமுகம், படத்தின் இயக்குநர் மணிசேகர் பாலு மகேந்திராவின் உதவியாளர் என்பதால் சஞ்சீவன் கவனத்திற்குரிய படமாக உள்ளது.
ஸ்னூக்கர் விளையாட்டை கதைக்களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் திரைப்படம் சஞ்ஜீவன்.
புதுமுக நடிகர் வினோத் லோகிதாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்னூக்கர் விளையாட்டை ரசித்து விளையாடும் காட்சிகள்,காதல் காட்சிகள், நண்பர்களோடு இருக்கும் காட்சிகள் ஆகிய எல்லாவற்றிலும் தேர்ந்த நடிகராக வலம் வருகிறார்.
கதைநாயகனின் நண்பர்களாக வரும், சிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களுக்குரிய நடிப்பை மெருகேற்றியுள்ளனர் நாயகியாக திவ்யாதுரைசாமி
அமைதியான அழகுடன் நற்பண்புகளும் கலந்திருக்கும் கதாபாத்திரம். கார்த்திக் ஸ்வர்ணகுமார் ஒளிப்பதிவில் ஸ்னூக்கர் விளையாட்டு தெரியாதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது
தனுஜ் மேனனின் இசையில் பாடல்கள் நன்று. இறுதிப்பாடல் உருக்கம். முதல்பாதியில் ஸ்னூக்கர் விளையாட்டைப் படபடப்புடன் பார்க்க வைக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் வழக்கமான மசாலா சினிமாவாக வகைக்கொரு இளைஞரை முன்மாதிரியாக வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் இரண்டாம் பாகத்தை ரசித்துப் பார்க்க வைக்கிறது.
எங்கேயும் எப்போதும் படத்தை நினைவுபடுத்தும் இறுதிக் காட்சி திருப்பம் திரைக்கதைக்குப் பலம். எழுதி இயக்கியிருக்கிறார் மணிசேகர். அறிமுக இயக்குநர் என்பதால் அடக்கி வாசித்திருப்பார் என பார்த்தால், ஒழுக்கமானவன்தான் ஹீரோ என்பார்கள் இப்போதெல்லாம் குடித்தால்தான் ஹீரோ என்று தெறிக்கும் வசனத்தை திரைமொழியாக்கி அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார் மணிசேகர்.
இது போன்ற பஞ்ச் வசனங்களை அறிமுக நடிகர்கள் எளிமையான கதாபாத்திரங்கள் மூலம் பேசி சஞ்சீவன் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார்கள்.
இராமானுஜம்
வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி!
அரசு வழங்கும் இலவச காலணி மாணவிக்கா? அம்மாவுக்கா?